சங்கே முழங்கு – 2019

Sangae Muzhangu is a biennial Tamil theatre production by NUS TLS that has taken place since 1987. ( Photo : NUC )

சங்கே முழங்கு நாடகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாபெரும் நாடக படைப்பு ஆகும். இது 1987 ஆம் ஆண்டில் இருந்து NUS தமிழ்ப் பேரவையால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நாடகம் துவங்கியதில் இருந்தே NUS இந்திய மாணவர்கள் தங்கள் கலையாற்றலை வெளிப்படுத்தவும், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்க்கவும் இந்த மேடை ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது.

பொதுமக்களின் பேராதரவு கடந்த சில வருடங்களாக மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், இந்நிகழ்வு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் NUS தமிழ் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த சங்கே முழங்கு பல சாதனைகளை படைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சுமார் 3000 பார்வையாளர்களை இந்த நாடகம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ் புரியாத மக்களுக்காக ஆங்கில விளக்கவரிகள் புதிதாக இந்த நாடகத்தில் இணைக்கப்பட்டது.

சிங்கப்பூர் கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு சங்கே முழங்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாடகம் முன்னேற்றத்தைப் பற்றியும், அதை நாம் என்ன விலை கொடுத்து அல்லது தியாகம் செய்து வாங்கியுள்ளோம், என்பதை பற்றியும் அலசி ஆராய்கிறது.

ஆங்கில விளக்க வரிகளோடு இந்த ஆண்டும் நடைபெறும்.

நடைபெறும் இடம்:

பல்கலைக் கழக கலாச்சார அரங்கம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், சிங்கப்பூர்.

நேரம் :

ஆகஸ்டு 2 ஆம் தேதி மாலை 7.30 மற்றும் ஆகஸ்டு 3 ஆம் தேதி மாலை 7.00 மணிக்கும் துவங்கும்.

நுழைவுச் சீட்டுகள்:

$30 (முதன்மை), $24 (பிரிவு 1), $22 (பிரிவு 2), $20 (பிரிவு 3) மற்றும் $18 (பிரிவு 4).

பதிவு செய்ய: bit.ly/sangae19ticket

கூடுதல் தகவல் அறிய: +65 8106 6955