திரு.சர்ஜித் சிங் அவர்களுக்கு “SkillsFuture FellowShip” விருதை சிங்கப்பூர் குடியரசு தலைவர் வழங்கினார்!

Mr. Sarjit singh received SkillsFuture FellowShip award by singapore president

ISCA உறுப்பினர் மற்றும் ஆர்டெண்டின் நிர்வாகத் தலைவர், திரு. சர்ஜித் சிங் அவர்கள் சிங்கப்பூர் குடியரசு தலைவர் ஹலிமா யாகூப் அவர்களால் தனிநபர் திறன்களில் முதுநிலை மற்றும் எதிர்கால திறமைகளின் வழிகாட்டியாக திகழ்ந்ததற்காக Skillfuture Fellowship என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெற்ற சர்ஜித் பல ஆண்டுகளாக ISCA-வில் தொடர்ந்து தொழில்முறை கல்வியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். பாடம் கற்கவரும் பங்கேற்பாளர்களை தனது நட்பு, ஈடுபாடு, அணுகுமுறை மற்றும் கணக்கியல் நிபுணர்களை எதிர்காலத்தில் தயார் செய்யும் திறன்களுடன் பயிற்சியளிக்கிறார்.

சர்ஜித் தேசிய விருது பெற்றது பெருமையாக கருதப்படுவதாக ISCA தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.