“பயணிகள் ஆரோக்கியம் தான் எங்களுக்கு முக்கியம்” – சிங்கப்பூர் பேருந்து ஓட்டுனரின் நெகிழ வைக்கும் செயல்

sbs-bus-captain-shelter-heavy-rain
Shaheera Effendi from Mothership

இந்த மழை காலத்தில் மனிதநேயத்தை பறைசாற்றும் ஒரு சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது.

நேற்று நவம்பர் 12 அன்று, பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேலையில் SBS பேருந்து ஓட்டுநர் ஒருவர் இறங்கும் பயணிகளுக்கு உதவிய அவரின் எண்ணம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.

“உல்லாசம் அனுபவிக்க காசு” – கவர்ச்சி படங்களை அனுப்பி ஆண்களை ஏமாற்றிய நபருக்கு அபராதம்

பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க… அருகில் இருக்கும் பேருந்து நிறுத்த கூடாரம் வரை அவர்களை குடை பிடித்து கொண்டு சேர்த்த ஓட்டுநர் வெகுவாக அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார்.

தெம்பனீஸில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மதியம் 2:25 மணியளவில் இந்த மனதைக் கவரும் காட்சியைக் கண்டதாக Mothership வாசகர் ஷஹீரா எஃபென்டி என்ற பெண்மணி குறிப்பிட்டார்.

அன்பான இந்த செயலுக்காக பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் என்று அந்த வாசகர் கூறியுள்ளார்.

கெலாங் பகுதியில் ஆயுதம்கொண்டு தாக்குதல்: 26 வயது நபர் கைது