மோசடி போலி வாட்ஸ்அப் செய்தி குறித்து MOM எச்சரிக்கை!

Scam alert: Fake WhatsApp message, says MOM

சிங்கப்பூரில் பரவிவரும் மோசடி போலி வாட்ஸ்அப் செய்தி குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MOM) எச்சரிக்கை செய்துள்ளது.

சிங்கப்பூர் மக்களிடையே வலம்வரும் அந்த போலி வாட்ஸ்அப் செய்தியில், 1965-2019க்கு இடையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அரசாங்கத்திடமிருந்து, $6,500 கோரலாம் என்று ஒரு பொய்யான தகவல் பரவி வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், இந்த போலியான செய்தியில் MOM வலைத்தளத்திற்க்கு witbenefits.top/mom என்ற தவறான இணைப்பும் உள்ளது.

இது குறித்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறுகையில், அனைத்து தகவல்களையும், பரிவர்த்தனைகளையும் https://www.mom.gov.sg என்ற அதிகாரப்பூர்வ MOM வலைத்தளத்தில் மட்டும் பயன்படுத்தவும் என்று தெரிவித்துள்ளது.

கூடுதலாக, போலி “MOM” வலைத்தளங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை எவ்வாறு கண்டறிந்து புகாரளிப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகள் அனைத்தும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

“இதுபோன்ற போலி வலைத்தளங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து அவற்றை செயலிழக்க செய்வோம். அதிகாரப்பூர்வ MOM வலைத்தளம் பாதிக்காத வகையிலும், உங்கள் தரவைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.