சிங்கப்பூர் செய்திகள்

மோசடி அழைப்புகளில் இருந்து எப்படி தப்பிப்பது? – ICA அறிவுரை!

Please take note of this advisory and share it with your friends and loved ones!

மோசடி அழைப்புகளில் இருந்து எப்படி தப்பிப்பது? – சிங்கப்பூர் போலீஸ் கூறும் அறிவுரையை கேளுங்கள்.

“1800 3916150” இது போன்ற பல்வேறு எண்களிலிருந்து பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து தகவல்கள் சேகரிக்கப்படுவதாக, ICA அதிகாரிகள் கவனத்திற்கு இந்த தகவல் வந்துள்ளது.

மேலும் அவர்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்லது பணப் பரிமாற்றங்களைக் பற்றி கேட்டு வருவதாகவும், தரமறுத்தால் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதாக மிரட்டியுள்ளதாக ICA-விற்கு கூடுதலாக தகவல் வந்துள்ளது.

இது முற்றிலும் மோசடி, எந்தவொரு வடிவத்திலும் தொலைபேசியில் பணம் கேட்டு பொதுமக்களை ICA அழைக்காது. மேலும், பொது மக்கள் அத்தகைய அழைப்புகளைப் பெறும் போது பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அழைப்புகளையும், அதில் சொல்லும் செய்திகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் யாரும் இதனால் பீதி அடைய வேண்டாம்.

உண்மையான தொலைபேசி எண்ணை மறைத்து புதிய எண்ணைக் காண்பிக்க மோசடி அழைப்பாளர் ID ஸ்பூஃபிங் தொழில்நுட்பத்தைப் (spoofing technology) பயன்படுத்தலாம். அதன் காரணமாக இதுபோன்ற எண்களில் வரும் அழைப்புகள் உண்மை இல்லை.

மேலும், அரசாங்க அதிகாரிகள் எனக் கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் உங்கள் Embassy/ High commission- க்கு அழைப்பவரின் தொலைபேசி எண்ணை சொல்லி சரிபார்க்கவும்.

குறிப்பாக அவர்களிடம் பெயர், அடையாள எண், வங்கி கணக்கின் எண் அல்லது Credit கார்டு எண் போன்ற எந்தவித தனிப்பட்ட தகவல்களையும் பகிரவேண்டாம்.

குறிப்பு : தொலைபேசியிலோ அல்லது வாய்ஸ் மூலமாகவோ ICA எவ்வித பணபரிமாற்றத்தையும் கேட்காது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Related posts