இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் ஸ்கூட் விமானம் தாமதம்..!

Scoot flight threat passenger arrested

Scoot flight from India to Singapore delayed : கடந்த டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை இரவு, திருவனந்தபுரத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தின் என்ஜின்களில் பறவை தாக்கியது.

முதலில் இந்த விமானம்-TR531 உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்திய திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட இருந்தது.

இதையும் படிங்க : 3 வினாடிகளில் பிறந்த 3 குழந்தைகள்: 2020 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை சிங்கப்பூர் இனிதே வரவேற்றது..!

பாதிக்கப்பட்ட விமானத்தில் இருந்த ஸ்டோம் செய்தியாளர் மைக்கேல், விமான நிலையத்தில் தரையில் இருந்த ஊழியர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் ஸ்டாம்பிடம் கூறுகையில், “விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, என்ஜினில் பறவை தாக்கியது, அதை தொடர்ந்து கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டது” என்றார்.

Stomper Michael, who was on the affected flight, shared a photo of staff on the ground at the airport. (Photo : Stomp)

இதனை தொடர்ந்து, விமானம் திருவனந்தபுரத்திற்கு பத்திரமாக திரும்பியது. சேதமடைந்த நிலையில் என்ஜின் இருந்தபோதிலும் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறை கடுமையாக்கப்பட்ட முதல் நாளே பிடிபட்ட இருவர்..!

இந்நிலையில், சோதனைகளுக்குப் பிறகு, கேப்டனின் கூற்றுப்படி இயந்திரம் கடுமையாக சேதமடைந்ததால் விமானம் தகுதியற்றது என்று கருதப்பட்டது, மேலும் சிங்கப்பூரிலிருந்து மாற்று விமானம் அங்கே கொண்டுவரப்பட்டது.

மாற்று ஸ்கூட் விமானம் டிசம்பர் 30ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 31 அதிகாலை 3.40 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது.

ஸ்கூட் விமான நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.