திருச்சி to சிங்கப்பூர் Scoot விமானத்தில் கோளாறு; இரவு முழுவதும் பயணிகள் கடும் அவதி!

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் Scoot விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதியை சந்தித்தனர்.

தினமும் திருச்சி to சிங்கப்பூர் Scoot விமானம் இயக்கப்படுவது வழக்கம். திருச்சியில் இருந்து சரியாக (ஜூன் 4) நள்ளிரவு 1.30 மணிக்கு விமானம் புறப்படும் நேரத்தில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தொழிற்நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

அதன் பின்னர் விமானம் சரியாக (ஜூன் 4) அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சரி செய்யும் வரை பயணிகள் 2 மணி நேரம் விமானத்திற்கு உள்ளேயே அமர்ந்து இருந்தனர். பயணிகள் நள்ளிரவு என்பதால் உறங்க முடியாமல் கடும் அவதியை சந்தித்தனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

Scoot விமானத்தில் இரண்டாவது முறையாக கோளாறு ஏற்படுகிறது. சென்ற வாரம் இதே போல் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Scoot விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.