ஸ்கூட் விமானப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த இந்தியப் பயணிக்கு 4 மாதச் சிறை..!

Scoot passenger sentence molesting
Photo: Nuria Ling/TODAY)

ஸ்கூட் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த இந்திய பயணி ஒருவருக்கு மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, நான்கு மாத சிறைத்தண்டனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார் அவர்.

40 வயதான விஜயன் மதன் கோபால் என்ற அந்த பயணி, இந்தியாவின் கொச்சினிலிருந்து சிங்கப்பூர் நோக்கி நவம்பர் 2, 2017 அன்று பயணம் செய்தார்.

இதையும் படிங்க : ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!

இதில் 22 வயதான விமானப் பணிப்பெண்ணின் வலது கையைப் பிடித்து, முகத்தைத் தொட்டு, பிறகு அப்பெண்ணின் தொடையில் கையை வைத்ததாகவும், மேலும், அப்பெண்ணின் பின்புறத்தை தொட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விஜயனின் வழக்கறிஞர்கள் முயற்சிகள் செய்தபோதிலும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டார்.

விஜயன் அந்த குற்றங்களைச் செய்தார் என்பதற்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நியாயமான முறையில் அரசு தரப்பு சான்றுகள் நிரூபித்துள்ளதாக நீதிபதி கூறினார்.

நவம்பர் 2, 2017 அன்று காலை 8 மணியளவில் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், பாதிக்கப்பட்ட அந்த பெண், ஸ்கூட் மற்றும் விமான நிலைய காவல்துறையிடம் புகார் அளித்தார்.

விஜயன் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், மேலும் அந்த பெண் மோசமான தன்னுடைய சேவையை செய்தார் என்று அவர் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கொரோனா: 50-க்கும் குறைவானவர்கள் சமூக தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…