ஸ்கூட் விமான பயணிகள் ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது செயலாக்க கட்டணத்தை (Processing Fees) இனி செலுத்த வேண்டியதில்லை!

Indian man jailed

ஸ்கூட் விமான பயணிகள், பட்ஜெட் விமான நிறுவனத்தின் ஆன்லைன் அமைப்பு மூலம் விமானங்களை முன்பதிவு செய்யும் போது செயலாக்க கட்டணத்தை (Processing Fees) இனி செலுத்த வேண்டியதில்லை என்று ஸ்கூட் நிறுவனம் கடந்த திங்களன்று (செப்டம்பர் 23) அறிவித்துள்ளது.

ஸ்கூட் நிறுவன நேரடி சேனல்கள் வழியாக உலகளவில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு செயலாக்க கட்டணம் ரத்து செய்யப்படும் நடவடிக்கையை உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை “வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதல் மதிப்பை வழங்கும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கு இதற்கு முன்னர் ஒரு நபருக்கு S$ 10 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் PayPal மூலம் ஒரு விமானத்திற்கு வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலாக்க கட்டணங்கள், Apple Pay மற்றும் Google Pay மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு ஒரு பயணிக்கு S$ 10, One-Way Trip பயணத்திற்கு S$ 10, மற்றும் PayNow பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு S$ 4 வசூலிக்கப்பட்டது.

முன்னர், S$ 6 ஆக இருந்த AXS Payment Fees கட்டணம் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.