“நாங்கள் சரியாக சேவை வழங்கவில்லை” ; ஒப்புக்கொண்ட Scoot நிறுவனம்.!

man-charged-stealing scoot flight

சமீப காலங்களாக Scoot விமானத்தில் ஏற்பட்டு வரும் விமான தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை படிப்படியாக இழந்து வந்தது.

இதை கருத்தில் கொண்டு அந்த நம்பகத்தன்மையை மீண்டும் பெறும் நோக்குடன் அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை நடைமுறை படுத்தி வருகிறது.

தனது சேவையில் (On Time Performance) குறைபாடுகள் இருப்பதை Scoot நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அதன் தரம் 2018 இறுதியிலும் 2019 தொடக்கத்திலும் குறைந்துள்ளதை சுட்டி காட்டியுள்ளது.

சென்ற வருடம் 70 சதவீதம் சேவை தரம் இருந்தது. அதற்கு முன் 80 சதவீதம் என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த குறைகளை தகர்த்து விட்டு மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான சேவையை வழங்க முயற்சி எடுப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.