சிங்கப்பூர் TPE சாலை அருகே கடந்த 8 நாட்களில் இரண்டாவது நிலச்சரிவு

Tampines Expressway Second landslip
(PHOTO: Mothership)

லோயாங் அவென்யூ (Loyang Avenue) நோக்கி செல்லும், தெம்பனீஸ் அதிவேக நெடுஞ்சாலை (TPE) ஸ்லிப் ரோடு அருகே எட்டு நாட்களில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண் அரிப்புக்கு, சிங்கப்பூரில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (ஜன. 10) அறிவித்தது.

சிங்கப்பூரில் 1,050 முன்னணி ஊழியர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடப்படும்…!

நிலப் போக்குவரத்து ஆணைய பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் இந்த நிலச்சரிவு கண்டறியப்பட்டது.

சரிவு நிலப்பகுதியின் நிலைத்தன்மை பாதிக்கப்படவில்லை என்பதை முதற்கட்ட விசாரணைகள் கூறுவதாக LTA பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்லிப் ரோடு மூடப்பட்டது.

இன்று காலை புதுப்பிப்பில், ஸ்லிப் சாலையின் ஒரு பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

நிலப்பகுதியை பழுதுபார்க்கும் பணிகள் தொடருவதால் மற்ற பாதைகள் மூடப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அது அறிவுறுத்தியுள்ளது.

இந்தோனேசிய விமான விபத்து: சிங்கப்பூரர்கள் ஜக்கர்த்தா தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…