சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை விதிப்பு

Singapore Prison Services & Unsplash

மற்றொரு 39 வயதான வெளிநாட்டு ஊழியருக்கு, ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதற்காக மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் தீர்ப்பளித்துள்ளது.

ஹார்பர்ஃப்ரண்ட் அவென்யூவில் (Harbourfront Avenue) நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் அடங்கிய பையுடன் முனுசாமி ராமர்மூர்த்தி (Munusamy Ramarmurth) என்ற அந்த ஊழியர் பிடிபட்டார்.

“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை

அவர் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்ததாகவும், அவர் மலேசியர் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

போதைப்பொருள்

சுமார் 6.3 கிலோ எடையுள்ள சிறுமணிகளான அதை வைத்திருந்ததற்காக அவருக்கு கடந்த நவம்பர் 10ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதில் சுமார் 57.54 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

சிங்கப்பூரில், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் அளவு கடத்தப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சட்டம்.

முனுசாமியின் விவரம்

முனுசாமி சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

அவர் 2018ஆம் ஆண்டு ஜனவரி 26, அன்று மதியம் ஹார்பர்ஃபிரண்ட் சென்டர் டவர் 2இல் உள்ள துப்புரவு பணியாளர்கள் அறையில் கைது செய்யப்பட்டார்.

முனுசாமியை குற்றவாளி என்றும், அவருக்கு கட்டாய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கும் தனது முடிவை விளக்குவதற்காக 42 பக்க எழுத்து வடிவிலான தீர்ப்பை நீதிபதி ஆட்ரி லிம் வெளியிட்டார்.

சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு – இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்