ஓடும் கார் முன்பு வேண்டுமென்றே விழுந்து நடித்த ஊழியர்: வீடியோ வைரல் – போலீஸ் தலையிட்டு விசாரணை

சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் ஒன்றின் முன் வேண்டுமென்றே கீழே விழுந்து கார் மோதியது போல நடித்த ஊழியர் ஒருவரின் வீடியோ வைரலானது, இதனை தற்போது சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) விசாரித்து வருகிறது.

இந்த வினோதமான சம்பவம் Complaint Singapore முகநூல் குழுவில் கடந்த செப். மாதம் 28 ஆம் தேதி அன்று பகிரப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி – ஜுரோங், செங்காங்கில் நவீன தங்கும் விடுதிகள்!

சிராங்கூன் நார்த் அவென்யூ 5 வழியே கார் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரை எதிர்கொண்டார், என்பதை SPF கூறியுள்ளது.

பின்னர் கார் நெருங்கியதும், அவர் காரின் முன் விழுந்தார். கார் ஓட்டுநர் நல்வாய்ப்பாக பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்தினார்.

கார் இடித்தது போல் நடித்து காட்டிய அவரின் வீடியோ சம்பந்தப்பட்ட காரின் டேஷ்போர்டு கேமராவில் சிக்கியது. இதனை விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

வீடியோ

https://www.facebook.com/100034567905320/videos/480142714129580/

சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் முன்பு வேண்டுமென்றே விழுந்த ஊழியர் (வீடியோ): கார் மோதியது போன்று மகா நடிப்பு

“முதலாலினா இப்டி இருக்கணும்” – வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு இரு தொழில்கள் தொடங்க உதவி செய்த முதலாளி!