வெளிநாட்டு ஊழியர் விடுதி உட்பட 2 குழுமங்கள் கண்காணிப்பில்… விடுதியில் மொத்தம் 237 பாதிப்புகள் பதிவு

Singapore migrant worker dorms
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் தற்போது 2 கிருமித்தொற்று குழுமங்கள் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் யுனைடெட் மெடிகேர் சென்டர் (தோ பாயோ) மற்றும் ASPRI-வெஸ்ட்லைட் பாப்பான் தங்கும் விடுதி முறையே ஒன்று மற்றும் நான்கு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூர் ரோச்சோர் ஆற்றில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

யுனைடெட் மெடிகேர் சென்டரில் உள்ள குழுமம், ஒரு நர்சிங் ஹோம் ஆகும். இது 13 ஊழியர்கள், 60 குடியிருப்பாளர்களை உள்ளடக்கியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ASPRI-வெஸ்ட்லைட் பாப்பான் தங்கும் விடுதி தற்போது 237 நோய்த்தொற்று பாதிப்புகளை கொண்டுள்ளது.

இதில் விடுதிக்கு அப்பால் தொற்று பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் விடுதி குடியிருப்பாளர்களிடையே உள்-விடுதி பரிமாற்றத்தை உள்ளடக்கியது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த குழுமங்களில் உள்ள புதிதாக பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

கொரோனா: சிங்கப்பூரில் புதிதாக 9 பேர் உயிரிழப்பு – MOH

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டம் – முன்பதிவுக்காக முடங்கிய விமான இணையதளம்