விபத்தில் இறந்த வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து முழு சம்பளம் வழங்கி வரும் முதலாளி

(PHOTO: It's Raining Raincoats/Facebook)

சிங்கப்பூரில் விபத்தில் இறந்த தன் ஊழியருக்கு தொடர்ந்து முழு சம்பளத்தையும் முதலாளி வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த திரு மாரிமுத்து கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று, 32E துவாஸ் அவென்யூ 11ல் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தார், மேலும் இருவர் அதில் உயிரிழந்தனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ள விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

திரு சுவா ஜிங் டா என்ற அந்நிறுவன, மூன்றாவது நாளாக நேற்று (செப்டம்பர் 27) விசாரணைக் குழு முன் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் மனதில் நின்ற 38 வயதான திரு சுப்பையன் மாரிமுத்து இறப்பு குறித்து கண்ணீருடன் கவலையை வெளிப்படுத்தினார்.

இறந்த மாரிமுத்துவுக்கும் அவருக்கும் இடையில், ஊழியர்-முதலாளி என்ற உறவை கடந்து மிக சிறந்த உறவு உள்ளதாக கண்ணீருடன் குறிப்பிட்டார் அவர்.

அவருக்கு 10 மாதப் பெண் குழந்தை ஒன்று உள்ளது. “அவர் ஆறு வருடங்கள் எனக்காக வேலை செய்தார் … அவரின் இறப்பு செய்தியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்” என்றும் அவரின் முதலாளி கவலை கொண்டார்.

விபத்தில் காயமுற்ற அனைவருக்கும் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டதாக திரு சுவா கூறினார்.

இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்குவதாகவும், ஒவ்வொரு மாதமும் அவர்களின் முழு சம்பளத்தை அவர்களுக்கு அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

துவாஸ் விபத்து: “இறந்த மாரிமுத்துவுக்கும் எனக்கும் இடையிலான உறவு மிக சிறந்த ஒன்று ” – கண்ணீர் விட்ட முதலாளி