கடுமையான ஊழியர் பற்றாக்குறை, கட்டுமானத்துறை தடுமாற்றம்

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

கோவிட்-19 சூழலில் ஊழியர் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளதால் சிங்கப்பூர் கட்டுமானத்துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த சூழலில் கட்டுமான பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விடுதிகளில் கிருமி பரவல் அதிகரிப்பு – வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாரும் கவலை

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊழியர் பற்றாக்குறை சிங்கப்பூர் கட்டுமான துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த 2021ஆம் ஆண்டில் முதல் எட்டு மாத நிலவரப்படி கட்டுமானத் துறையைச் சார்ந்த சுமார் 1,538 நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாக ACRA தரவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் கட்டுமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும் எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் வருகை எண்ணிக்கை குறைந்தது, இதன்காரணமாக மனிதவள செலவுகள் அதிகரிப்பு மற்றும் கட்டுமான திட்டங்கள் தாமதம் ஆகியவை ஏற்பட்டன.

சிங்கப்பூர் விரைவில் மீண்டும் திறக்கப்படுவதை விரும்புவோர் பொறுமை காக்க வேண்டும் – அமைச்சர்

கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, சிங்கப்பூர் கட்டுமான துறையில் சுமார் 2,88,700 வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை 52,700 என குறைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து அதிகமான கட்டுமான ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர்.

தற்போது ஊழியர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்த துறைகள் பெரிய வளர்ச்சியை மீண்டும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

S Pass மற்றும் work permit உடைய வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வர மீண்டும் அனுமதி