சிங்கப்பூரில் புதிதாக 2,553 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – ஆறு பேர் பேர் உயிரிழப்பு

Photo: Yahoo

சிங்கப்பூரில் திங்கள்கிழமை (அக்டோபர் 18) நிலவரப்படி, புதிதாக 2,553 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதோடு, மேலும் ஆறு பேர் பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் அதிக ஆபத்துள்ள நாடு என COVID-19 பயண ஆலோசனையை வெளியிட்ட நாடு

அவர்கள் 78 மற்றும் 93 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பேர் கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, ஒருவருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது மற்றும் ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன. அவை என்ன என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிடவில்லை.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 239ஆக உயர்ந்துள்ளது.

சாலையில் லாரியை கவனமாக ஓட்டினால் பல்வேறு விபத்துகளை தவிர்க்கலாம் – காணொளி