விடுதிகளில் கிருமி பரவல் அதிகரிப்பு – வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாரும் கவலை

(Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு தரப்பினரை கவலை அடைய செய்துள்ளது.

சமூக அளவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பெய்யுமா? – வானிலை நிலவரம்

இதனால் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அதோடாது மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தோரும் பெரும் கவலையில் உள்ளனர்.

ஏக்கத்தில் உறவுகள்

ஒவ்வொரு குடும்பங்களிலும் அப்பா, அண்ணன், சகோதரன் என பல்வேறு உறவுகள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளனர். சிங்கப்பூரிலும் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் மீண்டும் எப்போது வருவார்கள் என்று ஏக்கமும் கவலையும் அவர்களுக்கு உண்டு, குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அந்த கவலை அதிகம் என்றே கூறலாம்.

பெரும் கவலை

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக விடுதிகளில் அடைந்து கிடைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது தான், குறைந்த அளவில் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் விடுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அது அவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதிகளில் தொற்று குழுமம்

சிங்கப்பூரில் தற்போது (அக்டோபர் 1) எட்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தினசரி நிலவரப்படி, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 818 குடியிருப்பாளர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சகமாக, ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள Blue Stars தங்கும் விடுதி மிகப்பெரிய குழுமமாக உள்ளது. அங்கு மொத்தம் 442 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தினசரி கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது, அதே போல இறப்புகளும் பதிவாகிறது.

முன்னர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்த சிங்கப்பூரை சிறப்பாக வழிநடத்தி தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவந்த அரசாங்கம், தற்போதைய இக்கட்டான சூழலையும் வென்று வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக வழங்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

வேலையிடத்தில் இறந்துகிடந்த ஆடவர் – ஒருவர் கைது