வாட்ஸ்அப் குற்றம் பற்றிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் போலீஸ்.!

சிங்கப்பூர் போலீஸ் வாட்ஸ்அப் குற்றம் பற்றிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலி மூலம் இன்றைய சூழலில் பயனாளிகள் அதிகம் ஏமாற்றப்படுவதாக சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை செய்தியை பொதுமக்கள் இடையே வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஜனவரி (2019) மாதத்தில் இருந்து குறைந்தது 90 அறிக்கைகள் இந்த வாட்ஸ்அப் குற்றம் பற்றி வந்துள்ளதாக கூறியுள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்கள் முதலில் நண்பர் வட்டத்தில் இருந்து வாட்ஸ்அப் -இல் செய்தியை பெறுகின்றனர். பிறகு அந்த தகவலின் மூலம் 6 இலக்க எண்கள் SMS மூலம் அவர்களுக்கு வாட்ஸ்அப் பயனாளிகள் அனுப்புகின்றனர். இந்த 6 இலக்க எண்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் இலகுவாக வாட்ஸ்அப் கணக்கை நிர்வகிக்க தொடங்குகின்றனர்.

அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து பணங்களை அனுப்புதல், ஆன்லைன் மூலம் கிஃப்ட் கார்டு வாங்குதல் பிறகு அவற்றை இணையத்தின் வாயிலாக விற்றல் போன்ற சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் வாட்ஸ்அப் பயனாளிகள் விழிப்புடன் இருக்க வேண்டும், என்றும் யாருக்கும் தேவையில்லாமல் கடவுச்சொற்களை அனுப்ப வேண்டாம், என்றும் சிங்கப்பூர் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 2 step Authentication மூலம் தங்கள் வாட்ஸ்அப் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அறிவுரை கூறியுள்ளது. இந்த குற்றம் பற்றிய புகார் அளிக்க 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணையும் மற்றும் www.police.gov.sg/iwitness என்ற இணைய முகவரியையும் பயன்படுத்துமாறு சிங்கப்பூர் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.