சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.7 மில்லியனாக உயர்வு !

Singapore population Increases

சிங்கப்பூரின் மக்கள்தொகை வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக 1.2 விழுக்காடு அதிகரித்து, ஜூன் மாதம் 5.7 மில்லியனை எட்டியுள்ளது என்று ஆண்டு மக்கள் தொகை அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு 2019, ஜூன் புள்ளி விவரங்கள்:

சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் எட்டியுள்ளது, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.8 விழுக்காடு அதிகம்.

இதில் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 530,000 ஆகும். மேலும், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை 1.68 மில்லியன் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக 2018 உடன் ஒப்பிடுகையில் இது 2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கூடுதல் விவரம்:

2018 இல் புதிய குடிமக்களின் எண்ணிக்கை: 22,550

2018 இல் நிரந்தரவாசத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை: 32,710

அவர்களில் 61.6 விழுக்காட்டினர் தென்கிழக்காசியவைச் சேர்ந்தவர்கள்.