தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை எதிரொலி – சிங்கப்பூரில் அதிகரிக்கும் தடுப்பூசி விகிதம்

Photo: Getty

சிங்கப்பூரில் முதன்முறையாக தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு சில நடவடிக்கைகளில் அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதி – இந்தியாவிற்கும் வழிவகை செய்யும் திட்டம்

அக்டோபர் 9 முதல் 15 வரை, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை சுமார் 17,000 பேர் போட்டுகொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி-வேறுபட்ட நடவடிக்கைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸுகளை பெறும் நபர்களில் எண்ணிக்கையில் சுமார் 6,000 அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) அக்.18 இரவு தெரிவித்தது.

பூஸ்டர் தடுப்பூசி எடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, மேலும் 162,000 பேர் தங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

பாசிர் ரிஸில் நடந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உயிரிழப்பு