சிங்கப்பூர் பிரதமர் லீக்கு COVID-19 இருப்பதாக பரவும் குறிப்பு போலியானது- SGH மருத்துவமனை..!

SGH memo saying PM Lee has COVID-19 is fake, hospital says
SGH memo saying PM Lee has COVID-19 is fake, hospital says

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு COVID-19 தொற்று இருப்பதாக காட்டும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) குறிப்பு போலி என்று மருத்துவமனை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.

பிரதமர் திரு லீ சியென் லூங் COVID-19 தொற்று உள்ளதாக, SGH அடையாள சின்னம் கொண்ட ஒரு போலி குறிப்பு சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகளில் பரவி வருவதை அறிவதாக மருத்துவமனை பேஸ்புக் பதிவில் விளக்கி கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 65 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம்..!

பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த போலி செய்திகளை பரப்பக்கூடாது என்றும் SGH கேட்டுக்கொண்டுள்ளது.

We are aware of a fake memo bearing SGH logo circulating on social media and text messaging platforms that our Prime…

Posted by Singapore General Hospital on Thursday, April 2, 2020

திரு லீ அவர்கள், காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறலுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றதாகவும், அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருப்பதாகவும் அந்த போலி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) பிரதமரின் பெயரில் போலி மின்னஞ்சல் ஒன்று வலம் வந்தது, அதில் கருத்துக்களை கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

போலியான செய்திகளின் உண்மை நிலை தெரியாமல் அதை பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வரும் 7ஆம் தேதி முதல் பெரும்பாலான வேலையிடங்கள் மூடல் – பிரதமர் லீ..!