சிங்கப்பூரின் பழம்பெரும் ஷா டவர் மறு சீரமைப்பு! ஏக்கத்துடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்

Shaw Tower will be gone by 2023 singapore
Shaw Tower will be gone by 2023 singapore

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பழமையான ஷா டவர் விரைவில் மறு சீரமைக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 2018ம் ஆண்டு ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், 2023 க்குள் புதிய 35 மாடி அலுவலகம் மற்றும் வணிக கட்டிடமாக மாற்றுவதற்கு ஏதுவாக ஷா டவர் பெரும்பாலும் இடிக்கப்படும் என்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதே வருடம், அங்கும் குடியிருப்பவர்களுக்கு ஜூன் 30, 2020க்குள் வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரும்பாலான குடியிருப்புவாசிகள் அங்கிருந்து காலி செய்துவிட்டனர்.

ஷா டவர் தற்போது 260,000 சதுர அடி அலுவலக இடத்தையும் 100,000 சதுர அடி வணிக இடத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் தகவலின் படி, புதிய ஷா டவர், தனது அலுவலக இடத்திற்கான அளவை இரட்டிப்பாக்க உள்ளது. அதாவது, 400,000 சதுர அடி இடத்தில் அலுவலகங்கள் இயங்க உள்ளன. அதேசமயம், வணிக இடங்களுக்கு 30,000 சதுர அடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

40 வருடங்களுக்கு முன்பு, சிங்கப்பூரின் பீச் சாலை பகுதியில், URAவின் 1960ம் ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ஷா டவர் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.