புலாவ் புக்கும் (Pulau Bukom) சுத்திகரிப்பு தளத்திற்கு சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க பரிசீலனை!

Royal Dutch Shell is considering to install solar panels to power its Pulau Bukom refining site in Singapore. (Photo: AFP)

புலாவ் புக்கும் (Pulau Bukom) சிங்கப்பூரின் பிரதான தீவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது சுமார் 1.45 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவில் ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன.

இந்நிலையில், ராயல் டச்சு ஷெல் (Royal Dutch Shell) நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள தனது புலாவ் புக்கோம் சுத்திகரிப்பு தளத்திற்கு மின்சாரம் வழங்க சோலார் பேனல்களை அமைக்க பரிசீலித்து வருவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், “இந்த புலாவ் புக்கோம் தீவில் உள்ள உற்பத்தி தளத்திற்கு சோலார் பேனல்களை நிறுவுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் கூடுதலாக எந்த செய்தியும் குறிப்பிடாமல் இதனோடு முடித்துக்கொண்டார்.

புகோம் உற்பத்தித் தளத்தில் ஒரு நாளைக்கு சுமார் 5,00,000 பீப்பாய்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. இது ஷெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு தளம் ஆகும்.