சிங்கப்பூரில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜர்கள் அறிமுகம்!!

Royal Dutch Shell is launching electric vehicle chargers at petrol stations in Singapore, its first such foray in Southeast Asia, the company said on Monday (Aug 19).

சிங்கப்பூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜர்களை ராயல் டச்சு ஷெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அணுகுமுறை தென்கிழக்கு ஆசியாவில் முதன் முறையாக சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்று ஷெல் நிறுவனம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்திருந்தது.

ஷெல் சார்ஜிங் சேவை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சிங்கப்பூரில் உள்ள 10 ஷெல் பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த செய்தி சார்ஜிங் கார் வைத்திருப்போருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்வரும் இடங்களில் இந்த சேவையை நீங்கள் பெறலாம்:

நியூட்டன் ஹூப்பர், அலெக்ஸாண்ட்ரா, யிஷூன், ஆங் மோ கியோ, பயா லெபார் PIE, சோவா சூ காங், பூன் லே, செங்காங், ஹேவ்லாக் மற்றும் புக்கிட் படோக் வெஸ்ட் ஆகிய பகுதிகளில் நீங்கள் இந்த சேவையை பெறலாம்.

ஒரு kWh -க்கு $0.55 என, 30 நிமிடங்களில் இந்த ஷெல் சார்ஜர் பொதுவாக 0 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்கிறது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான மின்சார வாகனங்களுக்கு இந்த சார்ஜர் பொருந்தும், எனவே கவலை இல்லாமல் சுலபமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஷெல் நிறுவனம் கூறுகையில், மின்சார வாகன வைத்திருக்கும் நுகர்வோர் நடத்தை குறித்த ஆய்வில், “சிங்கப்பூரில் 52 சதவீதத்தினர் மின்சார காரை வாங்கவோ பயன்படுத்தவோ ஏதோ ஒன்று தடுப்பதை காட்டியுள்ளது. இதற்கான காரணம், சிங்கப்பூரில் போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லை, என்று அவர்கள் நினைக்கிறார்கள்”, என்று கூறியுள்ளது.

இதனை ஈடுகட்டும் விதமாக முதலில் 10 இடங்களில் இந்த சார்ஜிங் நிலையங்களை பொதுமக்கள் வசதிக்காக அமைத்துள்ளது.