இந்தியாவிற்கான SIA மற்றும் சில்க் ஏர் விமானங்கள் ரத்து..!

SIA and SilkAir cut flights to and from India
SIA and SilkAir cut flights to and from India

தெற்காசிய நாட்டு விசிட்டிங் விசாக்களை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் விமான நிறுவனங்கள், ஏப்ரல் 26 வரை இந்தியாவின் பல நகரங்களுக்கு விமானங்களை ரத்து செய்துள்ளன.

SIAவின் இணையதள அறிக்கையின்படி, அறிவிக்கப்பட்ட இந்த ரத்து காரணமாக இரு விமான நிறுவனங்களின் திறன் 15.6 சதவீதம் குறையும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து பள்ளிவாசல்களும் தற்காலிகமாக மூடல்..!

சமீபத்திய இந்த நடவடிக்கையில், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொச்சின், ஹைதராபாத், கொல்கத்தா, மற்றும் மும்பை உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கான விமானங்களைக் SIA மற்றும் சில்க் ஏர் ரத்து செய்துள்ளது.

மேலும், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக் மற்றும் தாய் ஏர்வேஸ் போன்ற பிற சர்வதேச விமான நிறுவனங்களும் இந்தியாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் அதனை தடுக்கும் முயற்சியாக, நாட்டின் அதிக அளவிலான விசாக்களை நிறுத்துவதாக இந்திய சுகாதார அமைச்சகம் (மார்ச் 11) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மில்லியன் கணக்கான வெளிநாட்டினர், தற்போது இந்திய நாட்டிற்குள் நுழைய விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்திய நாட்டினர், அத்தியாவசியமற்ற அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil