மீண்டும் நேரடி விமானச் சேவையை குறிப்பிட்ட பகுதிக்கு தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

(PHOTO: JP/Jessicha Valentina)

விமான பயணத்தை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையின் தொடங்க செயல்பாடுகளின் மத்தியில், நியூயார்க்கிற்கு தனது விமானங்களை மீண்டும் தொடங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மற்றும் நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி (JFK) விமான நிலையம் இடையே வாரத்திற்கு மூன்று முறை இடைவிடாத விமானங்கள் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3ஆம் கட்டத் தளர்வு அமலுக்கு வரலாம்..!

தற்போதைய சூழலில், ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்களை இயங்குவது, நியூயார்க்கிற்கு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விமானச் சேவை, சாங்கி விமான நிலையம் வழியாக தற்போது செல்லக்கூடிய வழிமாறும் பயணிகளின் எண்ணிக்கையையும் பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிக்கு சிங்கப்பூரில் இருந்து செல்லக்கூடிய ஒரே விமானச் சேவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் மெட்ரோ பகுதியில் உள்ள மருந்துகள், மின்னணு வணிகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் இருந்து குறிப்பிடத்தக்க சரக்கு தேவை அதிகரிக்கும் என்று SIA எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரு கட்டுமான தளத்தில் தீ விபத்து – 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…