ஒன்றாக பிறந்து, ஒன்றாகவே படித்த இரட்டையர்கள் இறுதியாக ஒன்றாக ஒரே விமான நிறுவனத்தில் ஒரே பணியில் பயணம்!

Identical twins in S’pore Airlines cabin crew finally share same flight together

ஒன்றாக பிறந்து, ஒன்றாகவே வளர்ந்த இரட்டையர்கள் இறுதியாக ஒன்றாக ஒரே விமானத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணி குழுவில் பயணித்தனர்.

லிஸ் மற்றும் லீ என் ஜீ என்ற (26 வயது) இரட்டை சகோதரிகள் பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாகவே படித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் culinary கல்லூரியிலும் ஒன்றாகவே தங்களுடைய படிப்பை தொடர்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் தன் தாய் கருவில் இருந்தே ஒன்றாகவே பிரியாமல் இருந்து வந்துள்ளனர்.

ஓர் அதிசயம் என்னவென்றால், இருவரில் ஒருவர் தன் தாயின் கருவறையில் இருக்கும் போது மருத்துவர்கள் கண்டறியவில்லை. ஏனெனில் அவர்களின் இதயத்துடிப்பும் ஒன்றாகவே இருந்துள்ளது.

ஆகவே, இருவரும் ஒருவராய் வாழ்ந்து வந்துள்ளனர். அதே போல் இருவரும் சிங்கப்பூர் ஏர்லைஸில் கேபின் பணி குழுவினராக விண்ணப்பிக்க முடிவு செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது.

அதன் பிறகு நீண்ட காலத்திற்கு இருவரும் பிரிக்கப்பட்டனர். ஏனென்றால், மூன்று மாத பயிற்சியின் போது ஒருவருக்கொருவர் வெவ்வேறு தொகுதியில் பிரித்து அனுப்பப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இனி கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால், இறுதியில் இருவரும் எல்லா சோதனைகளையும் கடந்து SIA கேபின் பணி குழுவினராக நியமிக்கப்பட்டனர்.

இந்த இருவரையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எல்லா நேரங்களிலும் ஒன்றாக விமானத்தில் செல்ல அனுமதி வழங்கியது.

அவர்கள் இருவரும் டிசம்பர் 2018 பாரிஸுக்கு விமானத்தை ஓன்றாக இயக்கியது தன் வாழ்வில் சிறப்பாக அமைந்ததாக இருவரும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த இரட்டையர்களின் இருவரான லிஸ் கூறுகையில், ஓரு பயணி எங்களை பற்றி சக பயணிகள் அனைவரிடமும் கூறினார். இதனால் மக்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள், என்று மகிழ்ச்சி நிரம்ப கூறினார்.