சிங்கப்பூர் வேலைக்கான ஏஜெண்ட்களின் மோசடி குறித்த சாதாரண ஊழியரின் உணர்ச்சிமிக்க பதிவு..!

சிங்கப்பூர் வேலைக்கான ஏஜெண்ட்களின் மோசடி குறித்து ஒருவர் சமூக வலைதளத்தில் உணர்ச்சிமிக்க பதிவு ஒன்று செய்துள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு அதிகமானோர் வேலைக்காக சென்றுள்ளனர்.

சிங்கப்பூர் வளர்ந்த நாடு, அழகிய நகரம், சுத்தம் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நாடு.

இந்நிலையில், சிங்கப்பூரில் வேலைக்காக செல்பவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றி வருவதாக சமூக வலைதளத்தில் ஒருவர் உணர்ச்சிபூர்வமான பதிவை ஏற்றம் செய்துள்ளார்.

சிங்கப்பூர் செல்வதற்காக வழிமுறை:

1) Construction permit சென்னை, தஞ்சாவூர், திருச்சி உட்பட சில நகரங்களில் Skill செண்டர்கள் உள்ளன. அங்கு சென்று பயிற்சி எடுத்து (கட்டணத்துடன்) அதன்பின் விசாவிற்கு பணம் செலுத்தி செல்லலாம்.

2) “Pcm permit, Shipyard permit, S pass” – ஆகியவற்றிற்கு Skill center போக வேண்டி தேவையில்லை. ஏஜென்சி மூலம் பணம் செலுத்தி செல்லலாம்.

சிங்கப்பூர் நாட்டிற்கான வேலைவாய்ப்புகள் பற்றிய அதிக விளம்பரங்கள் தினசரி பத்திரிகைகளிலும், சமூக வலை தளங்களிலும் வருகின்றன.

எல்லா விளம்பரங்களிலும் கூறப்பட்டிருப்பது. ஏஜென்சி சர்வீஷ் சார்ஜ் 1.75 லட்சம் முதல் 4 லட்சம் வரை. ஏன் இவ்வளவு சர்வீஷ் சார்ஜ், எதற்காக, யாருக்காக, என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பணத்தை பங்குபோடுவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பணத் தொகைகள் யாரால் தீர்மானிக்கப்படுகின்றது. சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்துள்ள வெளிநாட்டு பணியாளர்களில் 75% க்கும் மேலானவர்கள் சுமார் 3 லட்சம் செலவு செய்தே வருகின்றனர், என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.

கூடுதலாக அரபு நாடுகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ள சலுகைகள்:

1) கூண்டு வைத்த லாரிகள் இங்கே அனுமதியில்லை, கதவு மூடிய பஸ், வேன் போன்ற வாகனங்கள் தான்.
2) ஒருவருட கான்ட்ரக்ட்டாக இருந்தால், வருடம் முடியவும் ஒரு மாத விடுமுறை அந்த ஒரு மாதத்திற்கும் சம்பளம், போய் வர டிக்கெட் இலவசம். இரண்டு வருட கான்ட்ராக்ட், அதே போல இரண்டு மாத விடுமுறை சம்பளம்.
3) ஒரு ரும்க்கு 3, 6, அல்லது சில கம்பெனிகளில் 8 பேர்.
4) வாரம் ஒருமுறை ஊதியத்துடன் கூடிய விடுமுறை. ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை தினங்கள். (விடுமுறை தினத்தில் வேலைக்கு போனால் ஓவர்டைம்)
5) மருத்துவ விடுப்பிற்கு சம்பளம்.
6) விசா முடித்து ஊருக்கு செல்லும் பொழுது செட்டில்மென்ட்.

மணிகண்டன் செல்வராஜ் நாடார் கூடங்குளம் என்பவரின் முகநூல் பதிவு:

https://m.facebook.com/story.php?story_fbid=2180524055332367&id=100001243801993&sfnsn=mo