சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-யை பின்னுக்கு தள்ளி கத்தார் ஏர்வேஸ் முதல் இடம்.!

Singapore Airlines beaten by Qatar Airways

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-யை (SIA) வீழ்த்தி உலகில் சிறந்த விமான சேவை என்ற தகுதியை பெறுகிறது கத்தார் ஏர்வேஸ்.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வளைகுடாவின் சிறந்த விமான சேவை என்ற அந்தஸ்த்தை தக்கவைத்துள்ளது.

பேரிசில் (Paris) நடைபெற்ற உலக ஏர்லைன்ஸ் விருது வழங்கும் விழாவில் (2019) கடந்த வருட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எடிஷனை பின்னுக்கு தள்ளி கத்தார் ஏர்வேஸ் சிறந்த ஏர்லைன்ஸ் என்ற தகுதியை பெற்றுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சில முக்கிய விருதுகளான, சிறந்த Cabin Crew, சிறந்த ஆசிய விமானம், சிறந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் மற்றும் சிறந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் இருக்கைகள் ஆகிய விருதுகளை தட்டி சென்றது.

கத்தார் ஏர்வேஸ் இதற்கு முன்பு 2011, 2012, 2015 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் இந்த விருதை பெற்றுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2018 ஆம் ஆண்டு இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.