சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது சேதம்..!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது பின் பகுதியில் சேதம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மியன்மாரில் அதில் செப்பணிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த டிசம்பர் 2 அன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட SQ998 விமானம், யங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது அதன் பின் புறத்தில் ஓடு பாதையில் மோதி சேதமடைந்தது.

இருப்பினும், மெதுவாக அதன் முணையத்தை சென்றடைந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. அதையடுத்து விமானச் சேவையைத் ஆரம்பிப்பதற்காக SQ997 விமானம் யங்கூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

சிங்கப்பூர்-யங்கூன் சேவை வழக்கம் போல செயல்படுவதாகவும் சிங்கப்பூர் சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்த விமான விபத்து சம்பவம் தொடர்பாக மியன்மாரின் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைப் பிரிவுடன் ஒத்துழைத்து வருவதாகவும் சொந்த விசாரணைகளைச் செய்து வருவதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.