ஈரான்- அமெரிக்கா போர் பதற்றம்; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முக்கிய அறிவிப்பு..!

Singapore Airlines diverts flights from Iranian airspace

SIA diverts flights from Iranian airspace: ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புதன்கிழமை (ஜன. 8) ஈரானிய வான்வெளி பகுதியில் இருந்து அனைத்து விமான வழித்தடங்களையும் திருப்பிவிடுவதாகக் கூறியுள்ளது.

இதையும் படிங்க : தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் விபத்து; 170 பேர் உயிரிழப்பு..!

ஈரானில் அமெரிக்க தலைமையிலான படைகள் மீது புதன்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறியது, இதனை அடுத்து மத்திய கிழக்கில் நாடுகளிடையே இச்சம்பவம் பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது .

இந்நிலையில், ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் “அனைத்து SIA விமான வழித்தடங்களும் ஈரானிய வான்வெளியில் இருந்து திருப்பி விடப்படுகின்றன,” என்று ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

மேலும், திசை திருப்பத்திற்கான காரணத்தை அதில் குறிப்பிடப்படவில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தர்பார் பட வெளியீட்டு விழா; ரஜினி ரசிகர் மன்றம் உற்சாக ஏற்பாடு..!