சுமார் 4,300 வேலைகளை குறைக்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமம்..!

Singapore Airlines Group to cut about 4,300 positions
Singapore Airlines Group to cut about 4,300 positions (Photo: Reuters)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமம், தனது மூன்று விமான நிறுவனங்களில் 4,300 வேலைகளைக் குறைப்பதாக நேற்று வியாழக்கிழமை (செப் 10) அறிவித்துள்ளது.

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த COVID-19 கிருமித்தொற்று காரணத்தால், விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பல லட்சக்கணக்கான மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞன் வடிவேல் பாலாஜி..!

இதில் குறைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2,400 ஆகக் இருக்கலாம். மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முடக்கம், ஊழியர்கள் மற்றும் விமானிகளுக்கான ஆரம்ப ஓய்வூதியத் திட்டம், அத்துடன் தாமாக வேலையைக் கைவிடும் திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளால் குறைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டாக, இந்த நடவடிக்கைகள் மூலம் 1,900 வேலைகளை குறைக்கப்பட உள்ளன என்று SIA தெரிவித்துள்ளது.

“இதன் விளைவாக, இந்த வேலை குறைப்பு சிங்கப்பூரிலும், SIA நிறுவனத்தின் வெளிநாட்டு நிலையங்களிலும் சுமார் 2,400ஆக குறைக்கப்படலாம்” என்று அது மேலும் கூறியுள்ளது.

வரும் 2024ஆம் ஆண்டு வரை, உலகப் பயணிகள் போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பாது என்று மதிப்பிடுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் ஏற்பாடுகளை செய்துதர நிறுவனம் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும், மேலும் ஊழியர்கள் மீதான மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$300,000 அதிகமான நிதி திரட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…