இந்திய விமானங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!!

sia-increase-flights-2024
(Photo: Singapore Airlines)

இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், கட்டணத்தில் (Return fares) 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

இந்தியா-சிங்கப்பூர் இடையே வரும் நவம்பர் 29-ஆம் தேதி விமான சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 பாதிக்கப்பட்ட தன்னுடைய 3 வயது குழந்தையுடன் தனிமையில் உள்ள தந்தை!

அது தினசரி VTL விமானங்களை சென்னை, டெல்லி மற்றும் மும்பைக்கு இயக்க உள்ளது, இதன் மூலம் தனிமை இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

கூடுதலாக நவம்பர் 29 முதல் அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் கொச்சியில் இருந்து VTL அல்லாத சேவைகளை விமான நிறுவனம் படிப்படியாக இயக்கும்.

சுற்றுப்பயணக் (Round trip) கட்டணங்கள் மொத்தம் ரூ.13,000இலிருந்து தொடங்கும், வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31க்கு முன்பாக, நவம்பர் 23-30 வரை இந்தச் சலுகையைப் பெறலாம்.

“இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம், ஏனெனில் 20 மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கான பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளோம் ” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இந்தியாவின் பொது மேலாளர் சை யென் சென் (Sy Yen Chen) கூறினார்.

DBS & POSB இணைய சேவை 2வது நாளாக முடங்கியது – வாடிக்கையாளர்கள் விரக்தி