குறிப்பிட்ட சில சேவைகளை மீண்டும் தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர்..!

SIA suspends flights
(Photo: Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சில்க் ஏர் ஆகியவை இந்த ஜூன் மற்றும் அடுத்த ஜூலை மாதங்களில் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு சில விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொடங்கும் இந்த சேவைகளில் பின்வருவன அடங்கும்: அடிலெய்ட், ஆம்ஸ்டர்டாம், ஆக்லாந்து, பார்சிலோனா, பிரிஸ்பேன், செபு, கிறிஸ்ட்சர்ச், கோபன்ஹேகன் (Copenhagen), ஹாங்காங், மேடன் (Medan), மெல்போர்ன் மற்றும் ஒசாகா (Osaka) ஆகியவை என்று SIA தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 60,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் இடவசதிகள்..!

விமானப் பயணங்கள் ஏதேனும் ரத்து செய்யப்பட்டிருந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் பயணச்சீட்டின் மதிப்புத் தொகையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை புதிய பயணங்களை முன்பதிவு செய்ய அவற்றை பயன்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளது.

COVID-19 காரணமாக முடங்கிய விமான சேவைக்கு பின்னர், மே 14 அன்று SIA அதன் 48 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஆண்டு நிகர இழப்பு S$212 மில்லியன் பதிவு செய்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் S$683 மில்லியன் இலாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தொடங்கும் விமான சேவையில், இந்த ஜூன் மற்றும் அடுத்த ஜூலை மாதங்களில் திட்டமிடப்பட்ட பயணிகளின் திறனில் சுமார் 94 சதவீதத்தை SIA குறைத்துள்ளது.

மேலும், சர்வதேச விமான பயணத்திற்கான தேவைக்கு ஏற்றவாறு தங்களுடைய திறனை SIA மற்றும் சில்க் ஏர் தொடர்ந்து மாற்றம் செய்யும் என்று SIA தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்தை மீண்டும் முன்பதிவு செய்யும் போது போனஸ் விமான வரவுகளும் வழங்கப்படும் என்று SIA தெரிவித்துள்ளது.

இந்த சவாலான காலகட்டத்தில் அவர்கள் அளித்த ஆதரவுக்கு தாங்கள் இந்த வழியில் நன்றி தெரிவிப்பதாக SIA குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, மறு முன்பதிவு கோரிக்கைகளை ஆன்லைன் படிவம் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும், பயண முகவர் மூலம் டிக்கெட்டுகள் பெற்ற வாடிக்கையாளர்கள் உதவிக்கு தங்கள் முகவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!