COVID-19 கொரோனா வைரஸ் தொற்று; விமான சேவையை குறைக்க முடிவு..!

Singapore Airlines to cut flights as COVID-19 outbreak hits demand
Singapore Airlines to cut flights as COVID-19 outbreak hits demand

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வருகின்ற மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு தனது உலகளாவிய விமான சேவையை தற்காலிகமாக குறைக்கவிருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால், விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குழந்தை உட்பட இருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதி; மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர்..!

மேலும், இந்த முடிவால் பாதிக்கப்படும் விமானங்களின் பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் SIA வழங்கியுள்ளது.

இதில் பிராங்க்ஃபர்ட், ஜகார்த்தா, லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், மும்பை, பாரிஸ், சியோல், சிட்னி மற்றும் டோக்கியோ ஆகியவை முக்கிய பாதிப்புக்குள்ளானவை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் தங்கள் சேவைகளை தற்காலிகமாக குறைக்கும்” என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 வைரஸ் தொற்று: உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அறிவுரைகள்..!

“நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிப்போம், மேலும் தேவையான மாற்றங்களைச் செய்வோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் வேறு விமானச் சேவைகளைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.