சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்; வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது..!

Singapore Coronavirus (COVID-19) SIA filghts
Singapore Airlines urges customers to only seek assistance for flights departing within 72 hours (Photo : Reuters)

Singapore Coronavirus (COVID-19): பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக மட்டுமே உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவல் காரணமாக விமானம் ரத்துசெய்தல்கள் குறித்து அதிக எண்ணிக்கையிலான சந்தேகங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகிறது, இதில் சில வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் புதிதாக 12 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!

இந்நிலையில், “எங்கள் வாடிக்கையாளர் சேவை மையங்கள், டிக்கெட் விற்பனை அலுவலகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அதிக அளவு வாடிக்கையாளர் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்” என்று SIA கூறியுள்ளது.

வாடிக்கையாளர்கள், 72 மணி நேரத்திற்குள் SIA நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். அப்படி செய்யும்போது, SIA முகவர்கள் அதில் கவனம் செலுத்துவதற்கும், தேவையான அவசர மாற்றங்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் SIA தெரிவித்துள்ளது.

விரைவான தொடர்புகளுக்கு, இணையம் வழி விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் SIA விரைவில் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நகரங்களான மிலன், பார்சிலோனா, பாரிஸ், மியூனிக் (Munic) மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான விமானங்களை நிறுத்தி வைப்பதாக SIA அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது நிலவும் சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது, மேலும் அசாதாரண சூழலில் வாடிக்கையாளர்களின் பொறுமையையும் ஆதரவையும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வேலை அனுமதி (Work Pass) பெற்ற இந்தியர் ஒருவர் பாதிப்பு..!

#coronavirus Singapore #coronavirus news #coronavirus update in Singapore #coronavirus update #coronavirus Singapore cases #coronavirus in Singapore #coronavirus cases in Singapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil