சிங்கப்பூரில் பணியாற்றிய தமிழக நிதி அமைச்சர்!!

(Photo: fb)

நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பி.டி.ராஜனின் பேரன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவார்.

இவர் திருச்சி என்ஐடியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். படிப்பை முடித்த கையோடு அங்கேயே, மிக பெரிய நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். தன் வகுப்பு தோழியான மார்கரெடை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியா முழுவதும் மருத்துவப் பொருள்கள், இதர கருவிகள் வழங்க சிங்கப்பூர் தயார்

2011இல் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றிய இவர், 2015ஆம் ஆண்டு தன் தாய்நாடு திரும்பினார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

இந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு நிதி அமைச்சர் ஆகியுள்ளார். இவரின் இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு உந்து சக்தியாக இவரின் மனைவி உள்ளார் என ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன.

தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது போக, அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வாங்கப்பட்டியிருக்கிறது.

இந்த கடன்களை நிர்வகிப்பது தமிழகத்தின் நிதி அமைச்சருக்கு காத்திருக்கும் பெரிய சவால் ஆகும். இருப்பினும் சமாளித்து விட முடியும் என ஊடகம் ஒன்றில் பேசும் போது நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவப் பொருள்கள், இதர கருவிகள் வழங்க சிங்கப்பூர் தயார்