“குழந்தைகளை பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்” – நானும் குழந்தை தான்.. அவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்குகிறேன்!

Singapore boy distributes goodie migrant workers
Akanksha

சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஆறு வயது சிறுவன் ஆதிவ் சேத், நேற்று டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகைநாளில் ​​புலம்பெயர்ந்த ஊழியர்கள் உட்பட சமூக மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கினார்.

அவர் தனது பெற்றோருடன், ரெட்ஹில் பகுதியில் உணவு பொருட்கள் அடங்கிய பைகளை விநியோகித்துள்ளார், சாண்டா கிளாஸ் ஆடைகளை அணிந்திருந்த அந்த சிறுவனை காணும்போது நமக்கே மகிழ்ச்சியாக இருந்தது.

மெரினா பேயில் மிதந்த ஆடவர் சடலம் (வீடியோ) – என்ன நடந்தது..? போலீஸ் விசாரணை

மதர்ஷிப்பிடம் அவரது தாயார் அகன்க்ஷா கூறியதாவது; வேறு நாட்டில் வேலை பொறுப்புகள் மற்றும் கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சிலர் தங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்மஸைக் கொண்டாட முடியவில்லை என்பதை அறிந்து ஆதிவ் மனம் உடைந்ததாகப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், ஊழியர்களின் குழந்தைகள் அவர்கள் சொந்த நாட்டில் இருக்கக்கூடும் என்பதால் இதைச் செய்ய விரும்புவதாகவும், அவர்களின் குழந்தைகளின் சார்பாக அவர்களுக்கு பரிசு வழங்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Akanksha

பற்பசை, டூத் பிரஷ், நூடுல்ஸ், வேர்க்கடலை மற்றும் டேனிஷ் குக்கீகள் அடங்கிய உணவு பைகளைத் தயார் செய்ய அவரும் அவரது கணவரும் சுமார் S$500 செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மதியம் 1 மணிக்கு பைகளை விநியோகிக்கத் தொடங்கிய அந்த குடும்பம், மாலை 6 மணிக்கு விநியோகத்தை முடித்தது. மழையின் காரணமாக இடையில் சிறிய இடைவெளி ஏற்பட்டதாகவும் கூறினார் அவர்.

முதல் நன்கொடை அல்ல

இது ஆதிவின் முதல் நன்கொடை அல்ல. கடந்த ஆண்டு, தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட, அவர் 50 நாட்களில் 100 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி, சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கத்திற்கு (SAVH) S$500 திரட்ட உதவினார்.

கிறிஸ்துமஸைக் கொண்டாட சென்றபோது ஏற்பட்ட விபரீதம்: கடலில் தவறி விழுந்த ஆடவர்