சிங்கப்பூரில் 11வது மாடி விளிம்பில் ஆபத்தாக விளையாடிய சிறுவன்…

(Photo from WhatsApp video)

சிங்கப்பூரில், 7 வயது சிறுவன் உயரமான குடியிருப்பு பிளாக்கின் விளிம்பில் ஆபத்தான முறையில் விளையாடும் காணொளி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவன் ஆபத்தான முறையில் விளையாடும் அந்த 26 விநாடிகள் கொண்ட காணொளி, வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்டது. அதனை எதிர் பிளாக்கில் இருந்தவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை… 10ம் வகுப்பு மாணவி காதல் பிரச்சனையால் தற்கொலை

இந்த சம்பவம் கடந்த பிப்., 5ஆம் தேதி இரவு 7 மணிக்குள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், விளிம்பின் கம்பி வேலியில் வெளிப்புறப் பகுதியில் சிறுவன் தொங்கிக் கொண்டிருப்பதையும், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் விளையாடுவதையும் காணொளியில் காணமுடிகிறது.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பெற்றோர் வீட்டில் இல்லை என்று ஷின் மின் டெய்லி தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து தனது மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற சந்தேகம் அவனின் தந்தைக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் தனது குழந்தைக்கு விளக்கினார்.

மேலும், அவர் தனது மகன் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்துவதாகவும் கூறினார்.

இனி திருச்சி – சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களில் பறக்கலாம்!!