இவர்களுக்கு மட்டும் தினமும் தள்ளுபடி; சிங்கப்பூர் Giant சூப்பர் மார்க்கெட் அறிவிப்பு.!

singapore chain giant supermarket
Pic: Today

சிங்கப்பூரில் உள்ள Giant சூப்பர் மார்க்கெட்டில் முதியோருக்கான தள்ளுபடி விற்பனையை ஜூலை 30ம் தேதி வரை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.

பொதுவாக Gaint சூப்பர் மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் வழங்கப்படும் தள்ளுபடியை, முதியவர்கள் ஜூலை 30ம் தேதி வரை வார நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் தொற்றையும் பொறுட்படுத்தாமல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி – கிறிஸ்தவ அமைப்புகளை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு நாளை (ஜூன் 14) முதல் 3 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகலாம் என Giant சூப்பர் மார்க்கெட்டை நிர்வகிக்கும் Dairy Farm Group கூறியுள்ளது.

மேலும், சலுகைக் காலம் நீட்டிக்கப்படுவதால், வாரத்தின் எந்த நாட்களிலும் முதியோர்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு!