சீன புத்தாண்டு: சிங்கப்பூரில் அதிகரிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்!

Singapore Chinese New Year restrictions
Photo: Facebook

நாள் ஒன்றுக்கு வீட்டில் 8 வருகையாளர்களுடன், yusheng என்னும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் உட்பட இந்த சீன புத்தாண்டு அமைதியான முறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 காரணமாக இந்த சீன புத்தாண்டின்போது சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த 4 புதிய இடங்கள்

சிங்கப்பூரில் சமூக அளவில் ஏற்படும் தொற்றுநோயின் சமீபத்திய அதிகரிப்பை நினைவில்கொண்டு, பண்டிகை காலங்களில் மேலும் பரவும் அபாயம் உள்ளதால் இந்த கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு முந்தைய கொண்டாடட்டங்கள் போல இருக்காது என்று மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சரும் COVID-19 பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அமைதியான முறையில் அந்த கொண்டாட்டம் இருக்கும் என்றும், மேலும் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் குறித்து ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கட்டுப்பாடுகள்

Yusheng கொண்டாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

Lohei என்னும் சொற்களை வாய்விட்டு வெளியே சொல்லவேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சீனப் புத்தாண்டில் எந்தவொரு விழாக்களும் இருக்காது.

நிறுவனங்கள் கூட்டங்களை கூட்ட வேண்டாம் அல்லது lohei அல்லது உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் நினைவூட்டப்பட்டுள்ளன.

விதிகளை கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் சட்டத்தை மீறுவதைத் தவிர்க்கவும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டை இணையம்வழி சந்தித்து கொண்டாட அதிகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பரபரப்பான சாலை ஒன்றில் “ஆமை” கடக்க உதவும் ஓட்டுநர் – காணொளி