ஊழியர்களின் பற்றாக்குறையை சிறப்பாக சமாளித்த சிங்கப்பூர் நிறுவனங்கள்!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

கோவிட்-19 தாெற்றுப் பரவலின் நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூர் நிறுவனங்களில் பணியாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க, சிங்கப்பூரின் உணவு & பானக் கடைகள் அவர்களின் திறன்களை மேம்படுத்தி, பணிகளை மறுசீரமைத்து மின்னிலக்க முறையில் முயற்சி செய்துள்ளனர்.

சிங்கப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் WWE அறிமுக போட்டியில் அபார வெற்றி!

ஹான்ஸ் உணவகம், பழச்சாறு விற்பனையாளர் எஸ்எஃப் ஃபுட் & பிஸ்மில்லா பிரியாணி ஆகிய நிறுவனங்கள் பணியாளர்களின் பற்றாக்குறையை சிறப்பாக சமாளித்தனர்.

இந்த நிறுவனங்களின் அணுகுமுறை, உணவு & பான நிறுவனங்களுக்கான மனிதவள உத்திகள் நூலில் இடம்பெறும். மேலும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை மனிதவள மூத்த துணை அமைச்சர் திரு. ஸாக்கி முஹம்மது பாராட்டு தெரிவித்தார்.

சிறப்பு தேவையுடைய பணியாளர்களை ஹான்ஸ் நிறுவனம் பணியில் அமர்த்தி வருவதை திரு. ஸாக்கி சுட்டிக் காட்டினர்.

ஹான்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10% சிறப்பு தேவையுடைய பணியாளர்கள்.

எல்லா பிரிவுகளைச் சார்ந்த பணியாளர்களையும் அரவணைக்கும் மனப்பான்மையுடன் ஊழியர்களை பணியில் அமர்த்தினால், மனிதவளம் & வர்த்தகங்கள் சிறந்து விளங்கும் என திரு. ஸாக்கி கூறினார்.

பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வேலை பார்க்கக்கூடிய திறமைகள் ஊழியர்களிடம் இருப்பதை பிஸ்மில்லா பிரியாணி கடை நிரூபித்துள்ளது.

இதனால் வேலைகளைப் பாெறுத்து, தேவைப்படும் இடங்களுக்கு ஏற்ப பணியாளர்கள் மாற்றப்படுகின்றனர்.

இம்முயற்சியின் விளைவாக நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் சேர்த்து கிட்டதட்ட 25 பேர் அந்த நிறுவனத்தின் 4 உணவகங்கள், தொழிற்சாலை & சரக்குக் கிடங்கு ஆகியவற்றை நடத்துவதாக திரு. ஸாக்கி தெரிவித்தார்.

‘இந்த வேலையில் இருப்போர், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அவசியம்!’