சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு..!

Singapore companies fined
Singapore companies fined (Photo: Singapore Food Agency)

இறைச்சி பொருட்களை சட்டவிரோதமாக பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு உள்ளூர் நிறுவனங்களுக்கு புதன்கிழமை (அக். 28) தலா S$ 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி வெளியீட்டில், ILTM Tampines நிறுவனங்களில் ஒன்று, உரிமம் பெறாத இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தை இயக்கி வந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்தது.

சிங்கப்பூரில் வேலை அனுமதி பெற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு.

2019 நவம்பரில், இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் என்று உரிமம் பெறாமல், கோழி இறைச்சியை ஊறவைப்பது போன்ற நடவடிக்கைகள் அங்கு நடந்ததாக SFA அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதில் 78 பாக்கெட்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழிகளையும் SFA கண்டுபிடித்தது. பின்னர், அதிகாரிகள் அந்த பொருட்களுக்கு சீல் வைத்தனர்.

SFAஇன் ஒப்புதல் இல்லாமல் விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் அந்நிறுவனம் அந்த சீல் வைக்கப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட மற்றொரு நிறுவனம் Cent to Dollar. கடந்த மார்ச் மாதத்தில் அங்கு சுமார் 147 கிலோ வகைப்படுத்தப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட மாட்டிறைச்சிகளை SFA அதிகாரிகள் கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக இறைச்சி பொருட்களை பதப்படுத்தி சேமித்து வைக்கும் குற்றவாளிகளுக்கு, S$10,000 வரை அபராதம், 12 மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லலாம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…