சிங்கப்பூரில் நம்பிக்கையுடன் நிறுவனங்கள்… வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்!

(Photo: Today)

கடந்த ஆண்டு இல்லாத அளவுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் சிங்கப்பூர் நிறுவனங்களில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் விற்பனை அதிகரிக்கும், நிகர லாபம் அதிகமாகும் மற்றும் வேலை வாய்ப்புகள் மேம்படும் என நிறுவங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன.

சிங்கப்பூர் கமர்ச்சியல் கிரெடிட் பியூரோ (SCCB) அமைப்பு வெளியிட்ட அட்டவணை உதவியுடன் இந்த நிலவரங்கள் அறியப்படுகின்றன.

“சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களையும் கவர்ந்து ஈர்க்க வேண்டும்”

இந்த நம்பிக்கை, நிதி, உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மட்டுமே தெரிகிறது.

ஆனால், கட்டுமானம், போக்குவரத்துத் துறைகளில் அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அட்டவணை காட்டுகிறது.

சிங்கப்பூரில் சுமார் 200 முதலாளிகளை உள்ளடக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும், கட்டுமானம், போக்குவரத்து துறைகளில் இன்னமும் நம்பிக்கை நிலை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றின் காரணமாக எல்லை மூடல் நிலவுவதால், கட்டுமானப் பணிகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெடோக்கில் உள்ள காபி கடையில் சண்டை – ஆடவர் கைது