சிங்கப்பூருக்கு இந்த பிளானை போட்டுக்கொடுங்க… $500,000 பிரம்மாண்ட பரிசை தட்டிச் செல்லுங்க!

சிங்கப்பூரில் ஏழ்மையை முற்றிலுமாக போக்கும் திட்டத்தை சமர்ப்பிக்கும் குழுவுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சவாலான அறிவிப்பு கடந்த மே 19 அன்று தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் ஏழ்மையை முற்றிலுமாக ஒழிக்க திருப்புமுனை திட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு உள்ளூர் தொண்டு நிறுவனம் $500,000 பெரும் பரிசை வழங்கும்.

ரயில் பெட்டியில் திடீரென வெளியான வெள்ளை புகை… பதற்றத்துடன் இறங்கிய பயணிகள் – காரணம் என்ன?

Dreams Asia இன் இந்த முயற்சி,Dreams Asia Breakthrough Prize என்று அழைக்கப்படுகிறது. Covid-19 தொற்று பாதித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்?

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் உடைய சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

திட்டம் எப்படி இருக்க வேண்டும்?

சிங்கப்பூரில் உள்ள குடும்ப சேவை நிலையங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் பிற சமூகம் சார்ந்த அமைப்புகளால் செயல்படுத்தப்பட கூடிய வகையில் அந்த திட்டம் அமைய வேண்டும்.

இலவசம்

இதில் இலவசமாக பங்கேற்கலாம். சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுடன் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் இணைந்து செயல்பட்ட அனுபவத்தை கொண்ட எவரும் இதில் பங்கேற்கலாம்.

இந்த போட்டியின் மூலம் சிங்கப்பூரில் உள்ள வறுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

கையில் ஆயுதத்துடன்.. போலீசுக்கு அடங்க மறுத்த ஆடவரை Taser துப்பாக்கியில் சுட்டிபிடித்த போலீஸ்!