சொந்த நாடுகளுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்கள் – தடுமாறும் கட்டுமான நிறுவனங்கள்!

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

சிங்கப்பூருக்குள் நுழைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும், கட்டுமானத் துறையில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்து வருவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சுமார் 20 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டை விட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டதாக ஒப்பந்தக்காரர்கள் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லை நடவடிக்கைகள் தளர்த்தப்படுமா?

இதன் காரணமாக கட்டுமான திட்டத்தில் ஒரு வருடம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்களும் வருவாய் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

உதாரணமாக, Straits கட்டுமான நிறுவனத்தில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 350 கட்டுமான ஊழியர்கள் வேலையை விட்டு சென்றுள்ளனர்.

அந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். அந்த நிறுவனம் புதிதாக வெறும் 7 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்க்க முடிந்தது.

ஊழியர் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில், ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் ஊழியரை பணியமர்த்தும் முயற்சிலும் நிறுவனங்கள் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், U-home என்ற புதுப்பிப்பு நிறுவனம் அதிக சிங்கப்பூரர்களை வேலையில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரதட்சணை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்… சிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது கைது!