இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் சிங்கப்பூர்… இக்கட்டான நிலையில் நிறுவனங்கள்

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

காலம் காலமாக இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் தற்போது இக்கட்டான சூழலில் உள்ளன.

ஊழியர் தட்டுப்பாடு நிலவுவதால், அந்நிறுவனங்கள் மாற்றுவழிகள் குறித்து ஆராய்வதாக சில நிறுவனங்கள் சி.என்.ஏவிடம் தெரிவித்தன.

மனிதவள பற்றாக்குறை… சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி அதிகரிப்பு

கடந்த மே 2 முதல், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வருகையாளர்கள் சிங்கப்பூர் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் COVID-19 பரவல் மோசமடைந்து வருவதால், சிங்கப்பூர் அதன் எல்லை நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு மாற்றாக, சீன ஊழியர்களைப் பணியமர்த்த ஏற்படும் செலவுகள் அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, சீன ஊழியருக்கான செலவு நாள் ஒன்றுக்கு S$200லிருந்து S$300 என்றும், இந்தியா, பங்களாதேஷ் ஊழியர்களுக்கான செலவு S$120லிருந்து S$150க்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திட்டங்களை நிறைவு செய்ய அதிகபட்சம் 1 வருடம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், செலவுகள் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறையில் சுமார் 100,000 பேர் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் தற்போது நிலவி வருகிறது.

வேலை அனுமதிக்கான (work pass) புதிய விண்ணப்பங்கள் ஏற்பதை நிறுத்தும் சிங்கப்பூர்