இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று – சீன கட்டுமான ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்களுக்கு வசதி

(Photo: Today)

இந்தியாவில் தற்போது தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீண்டகால அனுமதி மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்திய கட்டுமான ஊழியர்களை பெரிதும் நம்பியுள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள், தற்போதைய இக்கட்டான சூழலை சரி செய்ய பல புதிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்கள் விபத்தில் சிக்கும் அவலம் – வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில், சீனாவிலிருந்து ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் கட்டுமான நிறுவனங்களுக்கு அதிக நீக்குப்போக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாடுகளின்கீழ், திறன் சான்றிதழ் பெறுவதற்கு வெளிநாட்டு சோதனை நிலையங்களில் நிறுவனங்கள் சேராமல் சீனாவிலிருந்து கட்டுமான ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த நடைமுறை மே 7 முதல் தொடங்கும் என்றும், 6 மாதங்களுக்கு நடப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத்துறையின்கீழ் உள்ள கட்டுமானப் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசமும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கும் விடுதி ஒன்றில் 24 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம்