கட்டுமான ஊழியர்களுக்கு சுய பரிசோதனை கருவி மூலம் மருத்துவ சோதனை..

migrant worker jailed in singapore
(Photo: wsatlaw)

கிருமித்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமான ஊழியர்கள் தங்களை சுய பரிசோதனை கருவி மூலம் மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது தங்கும் விடுதிகளில் வசிக்காத கட்டுமான ஊழியர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை சோதனை மேற்கொள்ளவேண்டும்.

இந்தியா மீதான நுழைவுத் தடை – மோசமாகும் ஊழியர்கள் நெருக்கடி

ஊழியர்களே சோதனை செய்துகொள்ளலாம், அல்லது ஊழியர்களுக்கு ஊழியர் உதவி செய்து அதனை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இது சில வேலையிடங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என கட்டிட மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.

ART பரிசோதனை கருவிகள் கூடுதலாக கிடைக்கும்போது, மேலும் அதிக வேலையிடங்களில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டம் பற்றி மேலதிக விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள்!